Latest Post

Image result for சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன?சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது.

இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசவுகரியம், ஒரு சிலருக்கு சிறுநீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற்பட காரணம், குறுகிய அளவிலான சிறுநீர்ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை அளிக்காவிடில், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிறுநீர்ப்பை அழற்சிக்கான சிகிச்சை முறை: சிறிய அளவிலான சிறுநீர்ப்பை அழற்சிக்கு, வலி நிவாரணி மற்றும் போதிய அளவிற்கு நீர் அருந்துவதன் மூலம், 4 முதல் 9 நாட்களில் சரியாகிவிடும். மிதமான நிலையிலுள்ள சிறுநீர்ப்பை அழற்சிக்கு, தேவையான சிகிச்சையுடன் 7 நாட்களுக்கு மருந்து உட்கொள்ள கொள்ள வேண்டும். சில சமயம், இது அடிக்கடி நிகழ்ந்தால், எந்த வகை பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்றவாறு மருந்து உட்கொள்ள வேண்டும். நிறைய நீர் அருந்துதல், பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் குறித்த காலங்களில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுவதை குறைக்கலாம்.
Advertisements

சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் மேற்கொள்ளும் பயிற்சிகளும் உட்கொள்ளும் ஊட்டச்சத்தான உணவுகளுமே, பிற்காலத்தில் நமது உடல் வலுவாக மாறுவதற்கு காரணமாக அமைகின்றன. கலை விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் நாம் பின்பற்றி வந்த பலவிதமான விளையாட்டுகள், நமது முழங்கால் மூட்டுகளுக்கும், குதிகாலுக்கும் வலுவை தருவதாகவே இருக்கின்றன.

நாகரிக வளர்ச்சியின் காரணமாகவும், விளையாட போதுமான இடமின்மை மற்றும் குறுகிய மனப்பாங்கு காரணமாக, இது போன்ற விளையாட்டுகள் குறைந்து, தொலைக்காட்சி, கணினி என்று பூட்டிய அறைக்குள் விளையாடுவதே, பல குழந்தைகளின் உடல் பருமனுக்கும், எதிர்காலத்தில் தோன்றும் மூட்டுவலிக்கும், முக்கியமான காரணம்.
நமது பாட்டி, தாத்தாக்களின் உடல் வலிமை நமக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். பல பெண்கள் நாற்பது வயதிலேயே பெண் தன்மையை இழந்து வருவதும், ஆண்கள், கழுத்துவலி, முதுகுவலி என்று அலுத்துக் கொண்டிருப்பதும் அதிகரித்து வருவதற்கு உடற்பயிற்சி இன்மையும், மூட்டுகளை சூழ்ந்திருக்கும தசை, தசைநார் மற்றும் சவ்வுகளின் வலிமை குறைவதுமே காரணம். இளம் பிராயத்தில் விளையாடாததால் தான், பிற்காலத்தில் எக்ஸ்ரே, ஸ்கேன் என்று, பல மருத்துவமனைக்கு ஏறி இறங்க வேண்டியுள்ளது.
Image result for மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால்முழங்கால் மூட்டில் ஏற்படும் பாதிப்பினாலும் சவ்வில் ஏற்படும் வீக்கம் மற்றும் திரவ பற்றாக்குறையினாலும், முழங்கால்வலி உண்டாகிறது. பெண்களுக்கு நொண்டி, பாண்டி, கயிறு தாண்டுவது, கயிறு இழுப்பது போன்றவற்றால், முழங்கால் மூட்டு தசைகள் பலமடைவதுடன், கருப்பை கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன.
ஆண்கள், சிலம்பம், கபடி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கிட்டிப்புல் போன்றவற்றால், மூட்டுகள் நன்கு சுழன்று, திரும்பி வேலை செய்வதுடன், ஆண் ஹார்மோன்கள் அதிகரித்து, போதுமான அளவு சுண்ணாம்பு சத்து சேர்ந்து, எலும்புகளின் பலம் அதிகரிக்கிறது. ஆண் மற்றும் பெண்களுக்கு, நடுத்தர வயதில் தோன்றும் பலவிதமான உடல் மற்றும் மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகை தான் முடவாட்டுக்கால்.
டிரைனேரியா குர்சிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாலிபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த புறணிச்செடிகள், பெரிய மரங்களை சார்ந்து வளர்கின்றன.
இவற்றின் வேர்கிழங்குகள் முடவாட்டுக்கால் என்ற பெயரில் கொல்லிமலைப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் வேர் கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.
முடவாட்டுக்கால் கிழங்கு 250 கிராம் வாங்கி, நன்கு கழுவி, சுத்தம் செய்து, மேற்தோலிலுள்ள ரோமங்களையும், புறணியையும் நீக்கி, இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கசகசா, தேங்காய் துருவல் ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி, அத்துடன் லவங்கப்பட்டை சேர்த்து, லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.
முடவாட்டுக்கால், அரைத்த மசாலா, வதக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை 1 லிட்டர் நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.
டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.

மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது.
வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது.
மினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில் கிடைக்கும் தண்ணீரைக்  குடித்துப் பழகிவிட்டோம். உண்மையில் அதில் ஊட்டச் சத்துக்கள் உள்ளனவா, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்ணீரில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையான நீரைத்தான் பருகுகிறோமா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. நீரின் தன்மை பற்றி  சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் எழிலனிடம் கேட்டோம்.
‘நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம்.    அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர்
களால் மாசுபட்டுள்ளது.  நம் நாட்டில், சுத்தமான குடிநீர் என்பது வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. இதனால்தான் கிருமியால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது” என்றார் டாக்டர் எழிலன்.
Image result for தேத்தாங் கொட்டை
நாம் பருகும் நீர் எப்படி சுத்திகரிக்கப்படுகிறது என்பது பற்றி அக்வா டெக் சிஸ்டம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மூர்த்தியிடம் கேட்டோம்… ‘வீட்டில் பொருத்தப்படும் வாட்டர் பியூரிஃபையரிலும், தண்ணீர் கேன் நிரப்பும் தொழிற் கூடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படுகிறது.  முதலில் கேண்டில் பில்டர் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப முறையில், இயற்கை மாசு வெளியேற்றப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. எதிர்சவ்வூடு பரவல் தொழில் நுட்பத்தின்படி மைக்ரான் அளவிலான சவ்வு வழியாக சுத்திகரிக்கப்பட்ட நீர் செலுத்தப்படுகிறது. அதையடுத்து கார்பன் ஃபில்டர் செய்யப்படுகிறது. பின்னர் ஒரு மைக்ரான் சவ்வு வழியாகவும், அதனையடுத்து 0.0001 மைக்ரான் அளவிலான சவ்வு வழியாகவும் அனுப்பப்பட்டு, தண்ணீரில் இருக்கும் மாசுக்கள் அகற்றப்படுகின்றன. இப்படிக் கிடைக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமானது.
வீட்டில் பயன்படுத்தும் சில சுத்திகரிப்பான்களிலும், தொழிற்கூடங்களிலும் அல்ட்ராவயலட் கதிர்களால் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. இந்த முறையில் இருந்து பெறப்படும் நீரின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
கேன் நிறுவனங்களில் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் முறை
இந்தியத் தர நிர்ணய விதிகளை, சில  நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், சில நிறுவனங்கள், தரமற்ற கேன்களை உபயோகப்படுத்துவதும் நடக்கிறது. சுத்திகரித்த தண்ணீர் சுகாதாரமற்ற கேன்களில் சேரும்போது, மீண்டும் தண்ணீரின் தரம் கெட்டுவிடுகிறது.
மினரல் வாட்டர் என்றால் என்ன?
காசு கொடுத்து வாங்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீர்தான் மினரல் வாட்டர் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை  இல்லை. நாம் வாங்கும் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர்  ‘சுத்திகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட குடிநீர்’ (packaged Drinking water) அவ்வளவு தான்.  மினரல் வாட்டர் என்பது கனிமங்கள் சரியான அளவில் கலக்கப்பட்ட சத்தான குடிநீர். ஒரு லிட்டர் தண்ணீரைத் தயாரிக்கவே 100 ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும்’ என்றார்.
‘தண்ணீரைச் சுத்தம் செய்ய, பல நவீன வசதிகள் வந்து விட்டாலும், அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்திய முறைகள், அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல’ என்கிறார்  சித்த மருத்துவர் திருநாராயணன்.
மேலும் அவர் கூறுகையில் ‘தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங் கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும் பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்துவிடுகிறது.முன்பெல்லாம் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கிணற்றில், நெல்லிமரக் கட்டையைப் போட்டுவைப்பது வழக்கம். அல்லது, தேற்றாங் கொட்டைகளைப் பொடித்து, ஒரு துணியில் கட்டி இறக்கிவிடுவார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவார்கள். கிணற்றில் மட்டுமல்ல, பானையில் கூட தேத்தா விதைகளைப் பொடித்து, துணியில் கட்டிப் போட்டுவைக்கலாம்.இப்போதும் நம் வீடுகளில் வரும் நீர் கடின நீராக இருந்தால், சம்ப் மற்றும் மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் நெல்லிக் கட்டை அல்லது தேத்தாங் கொட்டையைப் போட்டுவைக்கலாம். நல்ல பலன் கிடைக்கும். 
நீரைக் குடிக்கும் முறை
மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்பது தேரையர் பாடல்.
நீர் சுருக்கி’ என்பது நீரைக் காய்ச்சி (அதாவது வற்ற வைத்து) குடிக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. எனவே, காய்ச்சிய தண்ணீரைக் குடிக்கும் பழக்கமும் பாரம்பரியமாக   இருந்துவந்ததுதான். அதிலும், செம்புப் பாத்திரத்தில் காய்ச்சிக் குடித்தால், உடலில் இருக்கும் நிறமிகள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது.
தண்ணீர் சில மருத்துவப் பலன்கள்
  மருதம்பட்டையை, வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்னையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.
  சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
  பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மேலும், செரிமானத்தையும் சீராக்கும்.
  ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் ‘ஓமவாட்டர்’ கண்டிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது.
  நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ‘கிரைப் வாட்டர்’ போன்று செயல்படும்.
  கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது.
  வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.
காய்ச்சிய தண்ணீர்
தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்’ என்கிறார்கள். தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கு முறையான கொதிக்கவைத்தல்’ பற்றிச் சரியான புரிதலோ வழிகாட்டுதலோ இல்லை. தண்ணீரை அடுப்பில் வைத்து, லேசாகச் சூடு வந்ததுமே அடுப்பை அணைத்துவிடுகின்றனர். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, குமிழ்கள் வரும்போது, அந்தக் கொதிநிலையிலேயே 10 நிமிடங்கள்் இருக்கவேண்டும். இந்த நீரை ஆறவைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை. மேலும், பானையில் வைத்திருக்கும் நீராக இருந்து, ஒவ்வொரு முறையும் கையை விட்டு்த் தண்ணீரை எடுக்கும்போது, நம் கை மூலம் சில கிருமிகளை உள்ளேவிடுகிறோம். எனவே, தண்ணீரை முகந்து குடிக்காமல், ஊற்றிக் குடிப்பதுதான் நல்லது’ என்கிறார்  டாக்டர் எழிலன்



எப்போதும் பருவநிலைக்கு ஏற்ற உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால், நம்மில் யாருமே அதை பின்பற்றுவதில்லை. அந்த வகையில் கோடை காலத்தில் அசைவ உணவுகள் சிறந்ததா? என பார்ப்போம்...
 
அசைவ உணவுகளை கோடைகாலத்தில் தவிர்ப்பதே நல்லது. அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதயநோய் வருவதற்கான சூழலை ஏற்படுத்தும். 
 
அசைவம் என்றதும் நினைவுக்கு வருவது, பிராய்லர் கோழி. பிராய்லர் கோழிகளை கோடைகாலத்தில் மட்டுமல்ல எப்போதும் சாப்பிட கூடாது. நாட்டுக்கோழி சாப்பிடலாம். ஆனால், அதுவும் கோடை காலத்தின் போது தவிர்க்க வேண்டிய ஒன்றுதான். 
 
கோழிக்கறி உடலில் சூட்டை உண்டாக்கும் குணமுடையது. ஏனென்றால் வெயில் காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறால் மலச்சிக்கலும் வயிற்று உபாதைகளும் ஏற்படும். 
 
கோடையில், அசைவம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் மீன் குழம்புவைத்து சாப்பிடலாம். அதுவும் மசால குறைவாக. 
 
மிக முக்கியமான கோடை காலத்தில் மறந்தும்கூட சேர்க்க கூடாதது நண்டு. ஏனெனில் அது உடலில் எரிச்சலை ஏற்படுத்தும். அலர்ஜி உண்டாகவும் அதிக வாய்ப்புண்டு. 
 
இறாலையும் தவிர்க்க வேண்டும். நெத்திலி போன்ற மீன்களையும்,  முட்டையையும் சாப்பிடலாம்



கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. உடல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில்  கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கருணைக் கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை அதிகமாக யாரும் பயன்படுத்தவதில்லை. கருணைக்கிழங்கு ஜீரண மண்டலம்  சிறப்பாக செயல்படவும் மூலநோயை குணப்படுத்தவும் உதவுகிறது.
 
கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து உடல் உறுப்புகளுக்கு பலம்  தருவதாகவும் இருக்கிறது.
 
கருணைக்கிழங்கு சிறிது காரல் தன்மையுள்ளதால் கிழங்கை வேக வைக்கும் போது சிறிது புளியிட்டு வேக வைத்தால் காரல் தன்மை குறையும். கருணைக்கிழங்கை சிறிது நாள் வைத்திருந்து சமைக்கும் போது காரல் தன்மை குறையும்.





உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும். கருணைக்கிழங்கு ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்தது. உடலுக்கு உறுதியளிக்கக் கூடியது, பசியை  உண்டாக்கும் இயல்புடையது. 
 
பெண்களை வாட்டி எடுக்கும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக் கிழங்கை சாப்பிட்டால் உடல்வலி காணாமல்  போய்விடும்.

சாதாரணமாகவே வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும். அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
Curd
 
தயிர் உடலின் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தும். வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும். தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிர்ச்சிதான். இருந்தாலும் தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்குத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.


Image result for வல்லாரை மிக சிறந்த மருந்துமருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. பிரம்பி, சரஸ்வதி, சண்டகி, யோசனவல்லி போன்ற தமிழ்ப்பெயர்களாலும் வல்லாரை பொதுவாகஅழைக்கப்படுகின்றது.

வல்லாரையில் இரும்புச்சத்து, சுன்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் நிறைந்து காணப்படுகின்றது. இது இரத்தத்திற்க்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

தோல் வியாதி உள்ளவர்கள் வல்லாரை மிக சிறந்த மருந்து. இக்கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வர தோல் சம்பந்தமான வியாதி குறையும்.
வல்லாரை கீரையை பச்சையாக சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்படையும். மாலைக்கண் நோய் குணமாக வல்லாரை கீரையோடு பசும்பால் சேர்த்து உண்டு வர
மாலைக்கண் நோய் மறையும்.

வல்லாரை ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது. வல்லாரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி பெருகும். புத்தி கூர்மையாகும். நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை சாப்பிடுவது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.
வல்லாரைக் கீரையை நன்கு சுத்தம் செய்து, சாதாரணமாகக் கீரைச் சாம்பார் செய்யும் முறையில் சாம்பார் செய்து, வாரம் இரண்டு முறைகள் சாப்பிட நரம்புகள்
பலமடையும்.

வீக்கம், கட்டிகள் மறைய வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும். வல்லாரை இலைச்சாற்றைப் பிழிந்து, சம அளவு நெய் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாகும்.





உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும். குடல் புண்ணை ஆற்றும்.  வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.
 
புடலங்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். ருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். விந்துவைக் கெட்டிப்படுத்தும். ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல்  தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.
 
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வையைத் தூண்டும். இதில் நீர்ச்சத்து  அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
 
இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து  48 நாட்களுக்கு சாப்பிட்டு வர இதயம் சம்பந்த பட்ட  கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
 
புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை உடையவை.  பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.
 
புடலையின் வேர்ப்பகுதியானது மலமிளக்கியாகவும் புடலை இலையானது குடல் தொடர்பான பிரச்னைகளை சரி செய்யவும் பயன்படுகிறது. மிகவும் தீவிரமான  மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு புடலங்காயின் விதைகள் உதவும்.

உடல் ஆரோக்கியம் காக்கும் ஆலிவ் எண்ணை சருமத்தையும் வளமாக்கும். முற்காலங்களில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில
ஆலிவ் ஆயில் நாடுகள் அடங்கிய மத்தியத்தரைக்கடல் நாடுகளில், வீட்டு உபயோகத்தில் இருந்த ஆலிவ் ஆயில், இன்று உலகெங்கும் சமையலுக்கும், உடல் அழகுக்கும் பெரிதும் உபயோகமாகும் ஒப்பற்ற ஆயிலாகத் திகழ்கிறது. அதற்கு முக்கிய காரணம், அதிலுள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், பொட்டாசியம் போன்ற வேதித்தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துமிக்க கொழுப்பு எண்ணை ஆகியவைதான்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஆலிவ் ஆயில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு நிறைந்துள்ளதால், ஆலிவ் ஆயில், உலகின் அனைத்து பகுதிகளிலும், சமையலுக்கு பயன்படும் எண்ணையாகத் திகழ்கிறது. இதன் ஊட்டச்சத்துக்கள் சமையலுடன் சேர்த்து, உடல் மற்றும் முக அழகு பராமரிப்பிலும் சிறந்த பயன்கள் தருகின்றன. பல காலமாக, சமையலிலும், முக அழகு பராமரிப்பிலும் பயன்படும் ஆலிவ் ஆயிலை நீங்கள் இதுவரை, வீடுகளில் 
பக்கவாதம்
பயன்படுத்தியதில்லையா? அப்படியானால், இதுவே சிறந்த தருணம், ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவதால் அடையும் நன்மைகளைப் பட்டியலிடும் இந்தக் கட்டுரையை நீங்கள் படித்தவுடன், உங்களை ஆலிவ் ஆயிலை வாங்கத்தூண்டி, பயன்படுத்தி பலன்களை அடையவைக்கும். அதேபோல் இதுவரை உங்களுக்கு ஆலிவ் ஆயில் பற்றி இருந்துவந்த சந்தேகங்களும் ஒரு முடிவுக்கு வரும். டைப் 2 டையாபடிஸ் சர்க்கரை பாதிப்பின் பிரச்னைகள் இல்லாத நாடுகளே இல்லை என்ற இன்றைய காலகட்டத்தில், ஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் 
எலும்பு புரை
உபயோகப்படுத்தும் மேலைநாடுகளில் உள்ளோருக்கு, ஆலிவ் ஆயிலில் உள்ள நன்மை தரும் கொழுப்பு, உடலின் கெட்ட கொழுப்புகளை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை, இயல்பாக்குகிறது. ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், நீண்ட நாள் உடல்நல கோளாறுகளை சரியாக்க முடியும். குறிப்பாக, டைப் டயாபடீஸைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா?... வெயில் கொடுமை தாங்கமுடியலையா?... இத செஞ்சிங்கன்னா வெயில் உங்கள ஒன்னுமே செய்யாது... இந்த ஜூஸ் கசப்பா இருந்தாலும், உடல் எடையை சீக்கிரம் குறைச்சிடும் தெரியுமா? Featured Posts பக்கவாதம் பொதுவாக ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்படக்கூடிய பக்கவாத பாதிப்பைத் தடுக்கும் ஆற்றல், ஆலிவ் ஆயிலுக்கு உண்டு. இதிலுள்ள நல்ல கொழுப்பு, உடலிலுள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் லிபோபுரோடினை குறைத்து, அதனால் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, பக்க வாதம் வராமல், காக்கிறது. கேன்சர் புற்றுநோய் வைத்தியத்தில், ஆலிவ் ஆயில் சிறந்த பலன்தரும். இதன் ஒலேகெந்தால் எனும் ஊட்டத்தாது, உடல் திசுக்களின் அழற்சிகளைத் தடுக்கிறது. தினமும் ஆலிவ் எண்ணையை உபயோகிப்பதன்மூலம், சரும கேன்சர், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் கேன்சர் போன்றவற்றைத் தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், உடலிலுள்ள தனித்த செல்கள், DNA மூலக்கூறுகளைத் தாக்குவதைத் தடுக்கிறது. தினமும் பத்து மில்லி ஆலிவ் ஆயிலை சமையலில் சேர்த்துக்கொள்ள, பாதிப்புகள் விலகும். எலும்பு புரை ஆலிவ் ஆயிலில் உள்ள ஒலேயுரோபின் எனும் வேதிச்சத்து, எலும்பை வலுவாக்கும் செல்களின் உற்பத்தியை ஊக்குவித்து, கால்சியத்தை எலும்புகளில் சேர்க்கும். தினமும் ஆலிவ் ஆயிலை உபயோகித்துவர, எலும்புகளின் கால்சிய சத்தையும் எலும்பு தாதுக்களையும் அதிகரிக்கும். மன அழுத்தம் ஆலிவ் எண்ணையை தினமும் உணவுகளில் சேர்த்துவர, மன வளத்தை அளித்து, மனச்சோர்விலிருந்து வெளிவர உதவும். இதிலுள்ள நன்மைதரும் கொழுப்பு, மன அழுத்த பாதிப்புகளை சரியாக்குகிறது. ஆலிவ் எண்ணையைக்கொண்டு, உடலில் மசாஜ் செய்ய, நரம்புகளை இயல்பாக்குகிறது. இதனால், இரத்த ஓட்டம் சீராகி, மன அழுத்தம் குறைகிறது. ஞாபகமறதி ஞாபக மறதி நோயை ஏற்படுத்தும் மூளையின் அபரிமித அமிலாய்டு புரோட்டின் படலத்தை, ஆலிவ் ஆயிலிலுள்ள ஒலியோகெந்தால் தாது, குறைக்கிறது. தினமும் ஆலிவ் ஆயிலை உபயோகிக்கும்போது, அல்சைமர் வியாதி எனும் ஞாபக மறதியை குணமாக்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கணைய பாதிப்பு கணைய அழற்சியால் ஏற்படும் கடுமையான கணைய வியாதிகளை, ஒலிக் அமிலம் மற்றும் ஹைட்ராக்சிடைரோசொல் நிறைந்துள்ள ஆலிவ் ஆயிலை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம், கணைய பாதிப்புகள், நுரையீரல், உணவுக்குழல் பாதிப்புகளை சரிசெய்யும். நினைவாற்றல் ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் K, மூளையின் ஆற்றலை அதிகரித்து, மனத்தைக்கூர்மையாக்கி, விசயங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கும். ஆலிவ் ஆயிலிலுள்ள பாலிபினால் மற்றும் வைட்டமின் E, செயல் முடக்கத்தைத்தடுக்கும். கல்லீரல் ஆக்சிஜனேற்ற பாதிப்பு மற்றும் அழற்சிகளால், கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. எலுமிச்சை சாற்றுடன் ஆலிவ் ஆயிலை உட்கொள்ள, ஆக்சிஜனேற்ற தடுப்பாகவும், கல்லீரல் சுத்திகரிப்பானாகவும் செயல்பட்டு, கல்லீரலை வலுவாக்கும். ஆல்கஹால் மற்றும் காஃப்ஃபீன் கல்லீரலை பாதிக்காமல் தடுக்கிறது. குடல்புண் பெருங்குடலில் ஏற்படும் அழற்சி மற்றும் புண்ணை ஏற்படுத்தும் வியாதியைத் தடுக்கிறது. அழற்சியைத்தடுக்கும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ள ஆலிவ் ஆயிலை, தினமும் குடித்துவர, பாதிப்புகள் நீங்கும். வலிகள் மூட்டு இணைப்புகளில் ஆலிவ் ஆயிலைத்தடவ, வலி விலகும். வலியை ஏற்படுத்தும் என்சைம்களை, குணப்படுத்தும் ஆற்றல்மிக்கது, ஆலிவ் எண்ணையில் உள்ள ஒலியோகெந்தால். எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை தினமும், இருபத்தைந்து மில்லி உபயோகிப்பது, வலி நிவாரணியான இபுபுரூபன் மருந்தில், பதினைந்து சதவீதத்துக்கு சமம். நோயெதிர்ப்பு ஆற்றல் ஆலிவ் ஆயிலிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் E, உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி, கிருமிகளின் பாதிப்பைத் தடுக்கும். அதனால் இது நோயெதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கிறது. வயிற்றுப்புண் ஆலிவ் ஆயில் வயிற்றுப்புண்ணை ஏற்படுத்தும் ஹெலிகொபேக்டர் பாக்டீரியாவை குறைப்பதன் மூலம், வயிற்றைக் காக்கும். வயிற்றுப் புழுக்களை அழித்து, வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. செரிமானம் இரைப்பை பாதிப்புகளைத் தடுப்பதன் மூலம், செரிமானத்தைத் தூண்டி, மலச்சிக்கலைப் போக்கும். உடலின் மெட்டபாலிச்தை அதிகரிக்கச் செய்யும். அதனால் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்க முடியும். தாய்மையடைதல் கருவிலுள்ள குழந்தையின் உடல் இயக்கத்திறன், கண்பார்வை, சிறுநீரகம் மற்றும் கணைய வளர்ச்சியை வலுவாக்குவதில், ஆலிவ் ஆயில் பெரும் துணைபுரியும். அதனால் கரு உற்பத்தி, கரு வேகமாகவும் ஆரோக்கியமாகவும் வளருதல் என பல வழிகளில் நன்மை பயக்கிறது. காயங்கள் காயங்களை விரைவில் ஆற்றி, நகங்களை வலுவாக்கும். ஆலிவ் ஆயிலை குடித்தோ அல்லது காயங்களில் தடவியோவர, காயங்களில் உள்ள பாதிப்புகளைப் போக்கி, விரைவில் ஆற்றும். ஆலிவ் ஆயிலிலுள்ள வைட்டமின் E சத்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, நகங்களின் வளர்ச்சியைத்தூண்டி, சொத்தை மற்றும் வெளுத்த நகங்களின் தன்மையை மாற்றி, நகத்தைப்பொலிவாக்கும். உடல் எடை சாப்பிடுமுன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலைக் குடித்தால், பசியை குறைத்து, உடல் எடையை குறைக்கும். உடலில் கொழுப்பு சேர்ந்த இடங்களில் ஆலிவ் ஆயில் மசாஜ் செய்துவர, தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும். சருமப் பொலிவு அரிப்பு மற்றும் உடல் தடிப்பை, ஆலிவ் ஆயிலிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் குணமாக்கி, சரும செல்களை பொலிவாக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும். ஆலிவ் ஆயிலிலுள்ள ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு, சருமத்தை மென்மையாக்கி, வறண்ட சருமத்தை ஈரத்தன்மை மிக்கதாக மாற்றும் வைட்டமின் E, ப்ரீ ரேடிகல் செல்களின் வேகத்தைத் தணித்து, சருமத்தை பாதிப்புகளிலிருந்து காக்கிறது. வயதாவதைத் தடுக்கும் ஆலிவ் ஆயிலிலுள்ள பாலிபினால் மற்றும் ஒலிக் அமிலம், வயதாவதால் தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, சருமத்தைப் பொலிவாக்குகிறது. வயதான தோற்றத்தை போக்கி, இளமையாக வைத்திருக்க உதவுகிறது. முடி உதிர்வு தலையில் ஆலிவ் ஆயிலைத்தேய்த்துவர, முடி உதிர்தல் கட்டுப்பட்டு, முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஆலிவ் ஆயிலிலுள்ள ஸ்க்யூலின் மற்றும் பால்மிடிக் அமிலம், முடியை பளபளப்பாக்கி, வளர்ச்சியைத்தூண்டும். பொடுகைக் கட்டுப்படுத்தும். முகம் மற்றும் உடலில் போடும் மேக்கக்கை, கண் புருவத்தில் இடும் மையை அழிக்க, ஆலிவ் ஆயிலை பஞ்சில் தோய்த்து, தடவிவரலாம்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.